/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகள் இடையே வாலிபால் போட்டி; அன்னை வயலெட், எஸ்.வி.ஜி.வி., வெற்றி

ADDED : ஜூலை 03, 2025 09:04 PM

கோவை; வெங்கடேசலு நினைவு கோப்பை வாலிபால் போட்டிகள், சுகுணா ரிப் வி பள்ளியில் நடந்து வருகின்றன.
போட்டிகளில், 60 பள்ளிகளின், 98 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில், நான்கு நாட்கள் போட்டிகள் நடந்தன.மாணவர்களுக்கான, 14, 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
14 வயது பிரிவில், ஏ.பி.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீர்த்திமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணிகளுக்கு நடந்த போட்டியில் முதல் செட்டில், 25 - 17, 25 - 14 புள்ளிக்கணக்கில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
19 வயது மாணவியர் பிரிவில், கேம்போர்டு பள்ளி அன்னை வயலெட் பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில், 25 - 7, 25 - 14 என்ற புள்ளிக்கணக்கில், அன்னை வயலெட் அணி வெற்றி பெற்றது.எஸ்.வி.ஜி.வி., பள்ளி அணிக்கும், கணபதி சி.எம்.எஸ்., பள்ளிக்கும் இடையே நடந்த போட்டியில், 25 - 10, 25 - 5 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.வி.ஜி.வி., பள்ளி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நாளை நடக்கிறது.