/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்கலைகள் இடையேயான தடகள போட்டி
/
பல்கலைகள் இடையேயான தடகள போட்டி
ADDED : ஜன 07, 2025 07:12 AM
கோவை; ஒடிசாவில் நடந்த பல்கலைகளுக்கு இடையேயான தடகள போட்டியில், பாரதியார் பல்கலை வீரர், வீராங்கனைகள் அசத்தினர்.
அனைத்திந்திய பல்கலைகளுக்கு இடையே, இரு பாலருக்குமான தடகள போட்டிகள், ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள, கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில், கடந்த, 26 முதல், 30ம் தேதி வரை நடந்தது. இதில், 29 வீரர்கள், 22 வீராங்கனைகள் என, 51 பேர் பாரதியார் பல்கலை அணிக்காக பங்கேற்றனர்.
இதில், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை தாண்டுதல், ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தடை தாண்டுதலில், பல்கலை அணிக்காக விளையாடிய மாணவர் வேதப்பிரியன், 804 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.
வீரர்கள் அரவிந்த், பிரியான்சுராஜ் ஆகியோர் அரையிறுதி வரை முன்னேறினர். நீளம் தாண்டுதலில், 12 இடங்களில், மாணவி திவ்யாஸ்ரீ ஏழாம் இடம் பிடித்துள்ளார்.
இதர வீரர், வீராங்கனைகளும் தங்களது முழுத்திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலை உடற் கல்வி இயக்குனர் ராஜேஸ்வரன் பாராட்டு தெரிவித்தார்.