ADDED : ஆக 24, 2026 07:50 PM
கோவை: டெலிவரி ஊழியர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இ–ஸ்கூட்டர் திட்டம் குறித்து நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது. ஏராளமானோர் விண்ணப்பித்து வருவதாக, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, முதலில் டெலிவரி தொழிலாளராக பதிவு செய்திருக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம். நேரில் பதிவு செய்ய ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் நலன் அலுவலகத்தை அணுகலாம். பதிவு செய்ய கட்டணம் இல்லை.
தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பாஸ்புக், ஆதார் அட்டை, சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் விர்ச்சுவல் ஐ.டி., அல்லது அந்த செயலியில் உள்ள லாகின் புரொபைல் நகல் மற்றும் புகைப்படம் தேவைப்படும். ஊழியர்கள் பதிவு எண்ணை பெற்ற பிறகு இ–ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தில் தொழிலாளர் பதிவு எண், ஆதார் அட்டை, நலவாரிய அட்டை பதிவு எண், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள், ஓட்டுநர் உரிமம், வாகன ஷோரூம் விலைப்பட்டியல், புகைப்படம் மற்றும் கையொப்பம் தேவை.
தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து, அரசின் இ–ஸ்கூட்டர் திட்டத்தில் பயன் பெறலாம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
