ADDED : ஆக 24, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
கோவை: ஈரோடு மாவட்டம், சித்தோட்டில், கிரீன்லைப் பார்ம்ஸ் என்ற நாட்டுகோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி, 24.34 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அதன் நிர்வாக இயக்குனர்கள் விஸ்வநாதன், 49, கவுரிசங்கர்,49, ஆகியோருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை டான்பிட் கோர்ட்டில், கடந்த 20ம் தேதி தீர்ப்பு அளித்த போது இருவரும் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்ய சென்றனர். அவர்கள் தலைமறைவானதால் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
