/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளைஞர் நீதி குழும உறுப்பினராக ஆர்வமா
/
இளைஞர் நீதி குழும உறுப்பினராக ஆர்வமா
ADDED : ஆக 20, 2025 09:52 PM
கோவை; இளைஞர் நீதி சட்டத்தின் விதிமுறைகளின்படி நியமிக்க, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது அரசு வேலை அல்ல என்றாலும், அரசு மதிப்பூதியம் வழங்கும்.
விண்ணப்பிப்பவர்கள் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது, 7 ஆண்டுகள் ஈடுபாடு கொண்டவராக இருப்பது அவசியம். அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
35 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள், விண்ணப்பத்தை (https://dsdcpimms.tn.gov.in) பதிவிறக்கம் செய்து, இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண், 300 புரசை வாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை--600 010 என்ற முகவரிக்கு அனுப்பலாம், என கோவை கலெக்டர் கூறியுள்ளார்.

