ADDED : மார் 02, 2024 10:34 PM
அ நிறம் | அளவு
அன்னூர்:இயற்கை விவசாயம் குறித்த தொழில்நுட்ப கூட்டம், வரும் 5ம் தேதி அன்னூரில் நடக்கிறது.
வேளாண் துறை சார்பில், 'அட்மா' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் கூட்டம் அன்னூர், அவிநாசி ரோட்டில் உள்ள மகரிஷி மஹால் மண்டபத்தில் வரும் 5ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில், வேளாண், வேளாண் பொறியியல், தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று, இயற்கை வேளாண்மை மற்றும் அங்கக வேளாண்மை குறித்த தொழில்நுட்பங்களை தெரிவிக்கின்றனர்.
எனவே, விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என, வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
