/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனை சூறையாடல் வழக்கில் இடைக்கால தடை
/
மருத்துவமனை சூறையாடல் வழக்கில் இடைக்கால தடை
ADDED : செப் 20, 2024 09:28 AM
கோவை: கூலிப்படை ஏவி, மருத்துவமனை சூறையாடப்பட்ட வழக்கில், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை, சத்தி ரோடு, எல்லன் மருத்துவமனை டாக்டர் ராமச்சந்திரன்,77, தனது மருத்துவமனையை, சென்னை டாக்டர் உமா சங்கருக்கு குத்தகைக்கு ஒப்படைத்தார். இருவருக்கும் பணப்பிரச்னை ஏற்பட்டதால், கடந்த, 2020, டிச., 4ல் கூலிப்படையை ஏவிவிட்டு, மருத்துவமனையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது. இதற்கிடையில், டாக்டர் உமாசங்கர் கார் விபத்தில் பலியானார்.
மருத்துவமனையை சூறையாடிய வழக்கில், சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, டாக்டர் ராமச்சந்திரன், 77, காமராஜ், 52, மூர்த்தி, 47, முருகேசன், 49, பழனிசாமி, 57, வக்கீல் எஸ்.பி.ராஜேந்திரன் உட்பட 15க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது ஜாமின் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கு கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு சாட்சி விசாரணை துவங்க இருந்த நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி, டாக்டர் ராமச்சந்திரன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட் விசாரித்து,கீழ் கோர்ட் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
வழக்கு ரத்து கோரியதற்கு, பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிடப்பட்டது.