/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்., சி.ஓ.ஓ.,வுக்கு சர்வதேச விருது
/
கே.எம்.சி.எச்., சி.ஓ.ஓ.,வுக்கு சர்வதேச விருது
ADDED : டிச 25, 2024 10:34 PM

கோவை; பார்ச்சுனா குளோபல், பல்வேறு தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து, சிறந்து விளங்கும் நபர்களை பாராட்டி, விருது வழங்கி வருகிறது. ஆரோக்கியம், உடல் நலம், வர்த்தக செயல்பாட்டுத் திறன் ஆகிய பிரிவுகளில், விருதுகள் வழங்கப்படுகிறது
நடப்பாண்டு விருதுக்காக, 81 நாடுகளில் இருந்து 4 ஆயிரம் விண்ணப்பங்களைப் பரிசீலித்தனர். இறுதியாக, 47 நாடுகளில் இருந்து விருது பெறத் தகுதியான, 94 நபர்களைத் தேர்வு செய்துள்ளனர்.
அதில், கே.எம்.சி.எச்., சி.ஓ.ஓ., டாக்டர் சிவக்குமரனுக்கு, 'பார்ச்சுனா குளோபல் எக்சலன்ஸ் அவார்டு' வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில், தொலை நோக்குப்பார்வையுடன் கூடிய தலைமை மற்றும் புதுமைகள் புகுத்துதல் ஆகியவற்றில், சிறப்பான செயல்திறனுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. துபாயில் 'குயின் எலிசபை 2' என்ற, சொகுசுக் கப்பலில் நடந்த விழாவில், விருது வழங்கப்பட்டது.
மருத்துவத் துறையில் குறிப்பிட்ட பிரிவில், இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் டாக்டர் சிவக்குமரன். கே.எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி, செயல் இயக்குனர் அருண் ஆகியோர், சி.ஓ.ஓ., சிவக்குமரனை வாழ்த்தினர்.

