/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச 'பிடே ரேட்டிங்' செஸ் போட்டி; டிராபி வென்று அசத்திய கோவை வீரர்

ADDED : ஜூன் 09, 2025 11:26 PM

கோவை; சர்வதேச 'பிடே ரேட்டிங்' செஸ் போட்டியில் கோவை வீரர்கள், முதல் இரு இடங்களை பிடித்து பெருமை சேர்த்துள்ளனர்.
மூன்றாவது சர்வதேச 'பிடே ரேட்டிங்' செஸ் போட்டி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தது. இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, பீகார், அந்தமான் நிக்கோபார், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த, 382 வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
ஒன்பது சுற்றுகள் நிறைவில் கோவையை சேர்ந்த சஞ்சய் சரவணன் எட்டு புள்ளிகளுடன் முதல் பரிசையும், கோவையை சேர்ந்த அகிலன், 7.5 புள்ளிகளுடன் இரண்டாம் பரிசையும், யோகேஷ் செல்வம், 7.5 புள்ளிகளுடன் மூன்றாம் பரிசையும், தட்டிச் சென்றனர்.
முதல் மூன்று பரிசுகளாக, ரூ.50 ஆயிரம் மற்றும் டிராபி, ரூ.40 ஆயிரம் மற்றும் டிராபி, ரூ.30 ஆயிரம் மற்றும் டிராபி வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணய்யன் பரிசு வழங்கினார். மாவட்ட, மாநில செஸ் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.