/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்தினம் கல்லுாரியில் சர்வதேச கேரியர் ஆய்வகம்
/
ரத்தினம் கல்லுாரியில் சர்வதேச கேரியர் ஆய்வகம்
ADDED : நவ 13, 2024 04:32 AM
கோவை, : ரத்தினம் கல்விக்குழுமம்,ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சர்வதேச தரத்தில் பயிற்சி அளிக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 'நெக்ஸ்ட் ஜென் கேரியர்' என்ற பெயரில், புதிய ஆய்வக அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஆய்வகத்தை சர்வதேச நிறுவனமான, 'சிகிச்சின்' தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டோபர் கியர் திறந்து வைத்தார்.
இந்த ஆய்வகம் வாயிலாக, ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. நவீன தொழில்நுட்ப துறைகளில் செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், தரவு அறிவியல் போன்றவற்றில் பயிற்சியளித்து அவர்களின் கற்றல் திறமையை மேம் படுத்தப்படவுள்ளனர்.
உலகின் தலைசிறந்த நிறுவங்களான ஐ.பி.எம்., மைக்ரோசாப்ட் மற்றும் கோர்ஸ் இரா போன்றவற்றின் சான்றிதழ் படிப்புகளை ஆசிரியர்களுக்கு இந்த ஆய்வகம் வழங்கி, அவர்களை சிறந்த தொழிநுட்ப வல்லுனர்களாக மாற்றுவதே இதன் நோக்கம்.
ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில், இயக்குனர் சீமா, செயல் அதிகாரி மாணிக்கம், தலைமை வணிக அதிகாரி நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.