/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச சதுரங்க போட்டி சூலுாரில் துவக்கம்
/
சர்வதேச சதுரங்க போட்டி சூலுாரில் துவக்கம்
ADDED : மே 28, 2025 11:35 PM

சூலுார்; ஆர்.வி.எஸ்., கோப்பைக்கான சர்வதேச சதுரங்க போட்டிகள் சூலுாரில் துவங்கின.
கோவை மாவட்ட சதுரங்க கழக அனுமதியுடன், கோவை பிரண்ட்ஸ் செஸ் கிளப் சார்பில், ஆர்.வி.எஸ்., கோப்பை மற்றும் முதலாவது தரவரிசை புள்ளிகளுக்கான சர்வதேச சதுரங்க போட்டிகள், சூலுார் ஆர்.வி.எஸ்., குழும மண்டபத்தில் துவங்கியது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் கொரியா, அந்தமான் நிக்கோபாரை சேர்ந்த, 275 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி முதல்வர் மோகன், குழும நிர்வாக இயக்குனர் ஸ்ரீ வஸ்தன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். கோவை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் தனசேகர், பிரண்ட்ஸ் செஸ் கிளப் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
போட்டிகளுக்கான விதிமுறைகளை சர்வதேச நடுவர் விஜயராகவன் விளக்கினார். மொத்தம், 70 ரொக்க பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.