/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச செஸ் போட்டி துவக்கம் 294 வீரர், வீராங்கனைகள் 'களம்'
/
சர்வதேச செஸ் போட்டி துவக்கம் 294 வீரர், வீராங்கனைகள் 'களம்'
சர்வதேச செஸ் போட்டி துவக்கம் 294 வீரர், வீராங்கனைகள் 'களம்'
சர்வதேச செஸ் போட்டி துவக்கம் 294 வீரர், வீராங்கனைகள் 'களம்'
ADDED : ஆக 23, 2025 02:40 AM

கோவை: சர்வதேச அளவிலான செஸ் போட்டி, கிணத்துக்கடவு அக்சயா இன்ஜி., கல்லுாரியில் நடக்கிறது. ஐந்து நாள் நடக்கும் இப்போட்டியில் கனடா, அமெரிக்கா, ஸ்வீடன், இந்திய நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 294 பேர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, டில்லியை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். கோவை மாவட்ட செஸ் சங்கமும் இணைந்து நடத்தும் இப்போட்டியில், ஆறு முதல், 92 வயது வரையிலான வீரர், வீராங்கனைகள் 'ஓபன்' பிரிவுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் செந்தில்குமார், அக்சயா கல்லுாரி சேர்மன் சுப்ரமணியன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.
சர்வதேச நடுவர் அனந்தராமன், மாவட்ட செஸ் சங்க செயலாளர் தனசேகர், போட்டி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் உட்பட பலர் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.