ADDED : ஆக 03, 2025 09:51 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவன வளாகத்தில் இரண்டாவது சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன.
பெரியநாயக்கன்பாளை யம் யுனைடெட் கல்வி நிறுவனம் மற்றும் கோவை மாவட்ட செஸ் அசோசியேசன் ஆகியன இணைந்து பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவனத்தில் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளை நடத்தியது.
போட்டிகளை தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன் தலைவர் மாணிக்கம் துவக்கி வைத்தார். யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
போட்டியில், கனடா, அமெரிக்கா, ஜிம்பாவே, நெதர்லாந்து உள்ளிட்ட சர்வதேச செஸ் போட்டியாளர்கள் மற்றும் தேசிய அளவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்டவையும், தமிழக அளவில் அரியலுார், செங்கல்பட்டு, சென்னை, கோவை உள்ளிட்ட, 29 மாவட்டங்களைச் சேர்ந்த, 353 செஸ் போட்டியாளர்கள் உள்ளிட்ட, 399 பேர் கலந்து கொண்டனர்.