/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் சர்வதேச மாநாடு
/
வேளாண் பல்கலையில் சர்வதேச மாநாடு
ADDED : பிப் 20, 2025 11:50 AM
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் சார்பில் , ' ஒருங்கிணைந்த ஆரோக்கிய கோணத்தில், உலக பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி ' என்ற தலைப்பில், சர்வதேச மாநாடு நேற்று துவங்கியது. துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்து மாநாட்டை துவக்கிவைத்தார்.
மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின், பயிர் பாதுகாப்பு ஆலோசகர் சாமுவேல் பிரவீன் குமார் பங்கேற்று, பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்த ஆரோக்கியம் குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்துதல் குறித்தும் பேசினார்.
தொடர்ந்து, பயிர் பாதுகாப்பில் சமீபத்திய முன்னேற்றங்கள், காலநிலை மாற்றத்தால் பயிர் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள சவால்கள், மின்னணு தாவர பாதுகாப்பு குறித்து, துறை வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.
சர்வதேச அளவில் 500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்.
துவக்கவிழாவில், இந்திய பூச்சியியல் சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி, தாவர நோயியியல் துறை தலைவர் அங்கப்பன், பூச்சியியல் துறைத்தலைவர் முருகன், பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

