/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோள் மூட்டு வலி சிகிச்சை குறித்து சர்வதேச மாநாடு
/
தோள் மூட்டு வலி சிகிச்சை குறித்து சர்வதேச மாநாடு
ADDED : ஆக 13, 2025 09:10 PM
கோவை; ஆர்த்தோ-ஒன் அகாடமி சார்பில், 'ஷோல்டர் மாஸ்டர்ஸ் கோர்ஸ் 2025' என்ற தலைப்பில் தோள் மூட்டு வலி சிகிச்சை குறித்த சர்வதேச மாநாடு, தாஜ் விவாந்தா ஓட்டலில் நடந்தது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த 200க்கும் மேற்பட்ட எலும்பியல் நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ பயிற்சி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், என்.எம்.சி, விதிமுறைப்படி இந்திய சர்வதேச நிபுணர்களால் நடத்தப்பட்ட எட்டு நேரடி அறுவை சிகிச்சைகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
அறுவை சிகிச்சைகள் குறித்து உடனடி விவாதங்களும் நடைபெற்றன.
நேரடி பயிற்சி பட்டறைகளும், பல்வேறு தலைப்புகளில் விவாதங்களும் நடந்தது. கட்டுரை சமர்ப்பித்தல், விருதுகள் வழங்கல் மற்றும் மாணவர்களுக்கு பெல்லோசிப் வாய்ப்புகளும் வழங்கப்பட்டது.
ஆர்த்தோ - ஒன் எலும்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டேவிட் ராஜன், இயக்குனர் டாக்டர் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.