/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு
/
சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு
ADDED : ஜன 24, 2025 10:55 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான தேசிய மனித மேம்பாட்டு மையத்தின் சார்பில், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில், 'எதிர்காலத்தில், பெண் குழந்தைகளின் நிலை' என்பது குறித்த கருத்தரங்கு நடந்தது. இம்மையத்தில் தொழில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் பெண்கள் மற்றும் ரோட்டரி சமுதாய குழுவினரும் கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சரசு மற்றும் மையத்தின் இயக்குனர் சகாதேவன் ஆகியோர் செய்திருந்தனர்.
பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., தமிழ்ச்செல்வி பங்கேற்று, போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவை குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன், இடைநிலை ஆசிரியர்கள் கீதா, குமரேசன், நந்தினி, பட்டதாரி ஆசிரியர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

