/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கு
/
நேரு கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கு
ADDED : ஏப் 01, 2025 11:17 PM

கோவை; கோவை நேரு கல்வி குழுமம் சார்பில், திருமலையாம்பாளையத்தில் உள்ள பி.கே.தாஸ் அரங்கில், 'நிலையான வளர்ச்சிக்கான புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள்' என்ற சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
நேரு கல்விக்குழுமங்களின் சி.இ.ஓ., கிருஷ்ணகுமார் தொழில்நுட்பங்களின் மாற்றங்கள், வளர்ச்சி மாணவர்கள் அப்டேட் செய்துகொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். மலேசியாவின் சயின்ஸ் இஸ்லாம் பல்கலை பேராசிரியர் சுந்தரேசன் பெருமாள், 'தகவல் பாதுகாப்பு மற்றும் தொழில்முனைவோர் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்' குறித்து பேசினார்.
மலேசியாவின் மாரா பல்கலை ஸ்மார்ட் உற்பத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ரெங்கா ராவ் கிருஷ்ணமூர்த்தி, நிலையான வளர்ச்சியில் ஸ்மார்ட் உற்பத்தியின் பங்கு குறித்து, கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
நேரு கல்விக்குழும நிர்வாக இயக்குநர் (கல்வி மற்றும் நிர்வாகம்) நாகராஜா, ஐ.சி.என்.ஜி.டி.எஸ். அமைப்புச் செயலாளர் ஜெயபிரகாஷ், முதல்வர்கள் சிவராஜா, மணியரசன், நேரு கட்டடக்கலை கல்வி நிறுவன இயக்குனர் அம்ருதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

