ADDED : மே 28, 2026 05:56 AM

அன்னுார்: இந்தோனேசியாவில் நடக்கும் சர்வதேச ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க, அன்னுார் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
'ஸ்பீடு ஸ்கேட்டிங் பெடரேசன் ஆப் இந்தியா' அமைப்பு சார்பில், தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி, கடந்த பிப்.,ல் நடந்தது. சர்வதேச போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் பங்கேற்க, அன்னுார் அருகே சொக்கம்பாளையத்தை சேர்ந்த, பிளஸ் 1 செல்லும் மாணவி காவ்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமைப்பின் தலைவர் கிருஷ்ணா பாய்ஸ்வரே, பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'சர்வதேச ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி இந்தோனேசியாவில், ஜகர்த்தா நகரில் மே 29, 30, 31ம் நாட்களில் நடக்கிறது. இதில், பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிக்கு, ஸ்கேட்டிங் பயிற்சியாளர் மற்றும் இப்பகுதியினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்தோனேசியா செல்வதற்காக உதவும்படி மாணவி காவ்யா, கால்நடை அமைச்சர் கமலியிடம் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, அன்னுார் தெற்கு ஒன்றிய த.வெ.க., சார்பில், ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் மாணவிக்கு நிதியுதவி செய்யப்பட்டது.
