ADDED : ஜூன் 23, 2025 04:28 AM

n சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சூலுார், அனுக்ரஹா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. யோகிக் யோகா நிறுவனத் தலைவர் வாசன் பங்கேற்று, மாணவர்களிடையே யோகா செய்வதன் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு பல்வேறு யோகாசனங்களையும் பயிற்றுவித்தார். பள்ளி தாளாளர் ேஷாபா, பள்ளி முதல்வர் உமா மகேஷ்வரி, துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
n ராமநாதபுரம், புலியகுளம் ரோட்டில் அமைந்துள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கோவை மண்டல தலைவர் ராஜ்குமார், கோவை பிராந்தியத் தலைவர் லாவண்யா, அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் யோகாசனங்களை செய்து அசத்தினர்.
n சுந்தராபுரம், பாரதிய வித்யாலயா பள்ளியில யோகா சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 16 பள்ளி மாணவர்கள் பங்கேற்று, நெற்றியில் தண்ணீர் டம்ளருடன் கந்தராசனம் இரண்டு நிமிடம் செய்து சாதனைப் படைத்தனர். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
n பிச்சனுார், ஜெ.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த நிகழ்வுக்கு கல்லுாரி முதல்வர் மனோகரன் தலைமை வகித்தார். யோகா பயிற்சியாளர்கள் மனோஜ், சபின் ஆகியோர், யோகா பயிற்சி செய்வதால் உடலுக்கும், மனதிற்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து அவர்களின் வழிகாட்டுதல் படி, மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள் செய்தனர்.