தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அனைத்து துறைகளையும் ஆளும் ‘இன்டர் நெட்’: இன்று உலக இன்டர்நெட் தினம்

அனைத்து துறைகளையும் ஆளும் ‘இன்டர் நெட்’: இன்று உலக இன்டர்நெட் தினம்

அனைத்து துறைகளையும் ஆளும் ‘இன்டர் நெட்’: இன்று உலக இன்டர்நெட் தினம்


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 07:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: உலக இன்டர்நெட் தினம் ஆண்டுதோறும் அக்., 29ம் தேதி கொண்டாடப்படுகிறது.

1969ம் ஆண்டு அமெரிக்காவில் இரண்டு கம்ப்யூட்டர்களுக்கு இடையே முதல் மின்னணு செய்தி அனுப்பப்பட்டதை நினைவு கூறும் வகையில், 2005ம் ஆண்டு முதல் ‘இன்டர்நெட் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

இன்டர்நெட் தொடங்கிய காலத்தில் இதற்கு ‘ஆர்ப்பா நெட்’ என, பெயர் இருந்தது. கம்ப்யூட்டர் வாயிலாக தொடங்கிய இந்த சேவை, இன்று பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்து மனிதனின் விரல் நுனிக்கு வந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் மொபைல் இன்டர்நெட்டை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். தற்போதுள்ள காலத்தில், அனைத்து துறைகளிலும் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து, டிஜிட்டல் மயமாகி விட்டது. மேலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இன்டர்நெட் மாறியுள்ளது.

மாணவர்கள் உலகம்



இன்டர்நெட் இல்லாத இடமே இல்லை. கல்வித்துறையில் இன்டர்நெட்டின் பங்கு மிகவும் முக்கியமானது. தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் டி.என்.ஸ்பார்க் என்ற திட்டம், 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஏ.ஐ., கோடிங், ரோபோடிக்ஸ் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் கற்றுத் தரப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், 85 அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் மாணவர்கள் கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் பாட புத்தகங்கள் டிஜிட்டல் முறையில் அமைந்துள்ளது.

இன்னும், 10 ஆண்டுகளில் ஏ.ஐ., ரோபோட்டிக்ஸ் போன்ற துறைகள் அபரிவிதமான வளர்ச்சி அடையும். இதற்கு முக்கிய காரணம் இன்டர்நெட்.

கல்வியில் வளர்ச்சி



கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி கூறியதாவது:

இன்றைய அட்வான்ஸ் இன்டர்நெட் காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாணவர்களை சிறுவயதில் இருந்து தயார் செய்யும் நோக்கில், கடந்த 2024ல் அரசு பள்ளிகளில் இன்டர்நெட் சேவை தொடங்கப்பட்டது.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், 55 அரசு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி உள்ளது. இதில், 12 நடுநிலைப்பள்ளியில் இன்டர்நெட் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் உள்ளது. 43 பள்ளியில் ஸ்மார்ட் போர்ட் வசதி உள்ளது.

தற்போது, மாணவர்கள் கல்வியை மேம்படுத்தும் வகையில் தனித்தேர்வு, பாடம் சம்பந்தப்பட்ட தகவல்கள் மணற்கேணி செயலியில் கிடைக்கிறது. இதை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் இலவசமாகவே பயன்படுத்தலாம். இப்போதுள்ள மாணவர்கள் இன்டர்நெட்டை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

உள்ளங்கையில் உலகம்



-கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர் எடிசன் பெர்னாட் கூறியதாவது:

உலகில் பெரும்பாலான பகுதிகளில் இன்டர்நெட் வந்துவிட்டது. குண்டூசி முதல் விமானம் வரை ஆன்லைனில் வாங்கும் காலத்தில் உள்ளோம். மேலும், காப்பீடு, மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட சேவைகளும் கிடைக்கின்றன.

மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் போல் இணையமும் இப்போது இணைந்து விட்டது. இன்டர்நெட் இப்போது பன்மடங்கு வளர்ந்து விட்டது. இன்னும், 50 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். நம்முடைய வேலை தானாகவே நடக்கும்படி வருவதற்கும் வாய்ப்புள்ளது.

நல்லதும் இருக்கு!



கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பீட்டர் பிரகாஷ் கூறியதாவது:

இன்டர்நெட்டை தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இப்போது ஏ.ஐ., ஏ.எஸ்.ஐ., ஏ.ஐ., ஏஜென்ட் உள்ளிட்டவைகள் வந்து விட்டன. அதற்கேற்ப இணைய வேகத்தை அதிகரிக்க, சூப்பர் கம்ப்யூட்டிங் போன்றவை பயன்படுத்த துவங்கி உள்ளோம்.

இதை சமூக அக்கறையுடன் கையாண்டு, நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். தவறான பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும். இன்டர்நெட் வளர்ச்சிக்கு வரும் காலங்களில் உரிய கட்டுப்பாடு நடவடிக்கைகளை கொண்டு வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us