/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.டி.எம்., கொள்ளையனிடம் நீதிபதி நேரில் விசாரணை
/
ஏ.டி.எம்., கொள்ளையனிடம் நீதிபதி நேரில் விசாரணை
ADDED : செப் 30, 2024 06:25 AM

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏ.டி.எம்., கொள்ளையன் ஆசர் அலியிடம் குமாரபாளையம் நீதிபதி மாலதி, நேரில் விசாரணை நடத்தினார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், மூன்று ஏ.டி.எம்.,களை உடைத்து கொள்ளையடித்து தப்பிய வடமாநில கொள்ளை கும்பலை, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தமிழ்நாடு போலீசார் பிடித்தனர்.
அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற இரண்டு பேர் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் சுமைன் என்பவர் உயிரிழந்தார். ஆசர் அலி காலில் குண்டு பட்டு காயமடைந்தார். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குமாரபாளையம் நீதிபதி மாலதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ஆசர் அலியிடம், நேற்று மாலை முதல் நான்கு மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, வாக்கு மூலம் பதிவு செய்தார்.