/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்துணவு ஊழியர் பதவிக்கு வரும் 16ல் நேர்காணல்
/
சத்துணவு ஊழியர் பதவிக்கு வரும் 16ல் நேர்காணல்
ADDED : ஜூன் 09, 2025 10:20 PM
அன்னுார்; அன்னுார் ஒன்றியத்தில், சத்துணவு ஊழியருக்கான நேர்காணல் வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.
அன்னுார் ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலை என 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் 95 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. 6,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில், பணியில் இருந்து ஓய்வு, இறப்பு உள்ளிட்ட காரணங்களால், 50க்கும் மேற்பட்ட மையங்களில், அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அன்னுார் ஒன்றியத்தில் 15 மையங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரலில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஆம்போதி நடுநிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு மைய உதவியாளர் பணியிடம் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது. இறுதி நாள் வரை அந்த மையத்தில் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை.
மீதி உள்ள 14 இடங்களுக்கு, 53 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 42 விண்ணப்பங்கள் தகுதியானவை என கண்டறியப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 16ம் தேதி அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காலை 11:30 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் உள்ளிட்டோர் அடங்கிய குழு நேர்காணல் நடத்துகிறது.