/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அரோமா' சிறப்பு தொகுப்பு அறிமுகம்
/
'அரோமா' சிறப்பு தொகுப்பு அறிமுகம்
ADDED : அக் 11, 2025 10:34 PM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரோமா குழுமம் ஐந்து சிறப்பு காம்போ தொகுப்புகள் கொண்ட பிரத்யேக பரிசு பெட்டிகளையும், 17 இனிப்பு பரிசு பெட்டிகளையும், ட்ரை நட் கலெக்சனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
15க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய மதுரம் தொகுப்பு, நெய் இனிப்புகள் மற்றும் பாரம்பரிய கார வகைகளின் கலவையுடன் அமிர்தம் தொகுப்பு, மைசூர் பாக் முதல் பாதுஷா வரை 15 வகையான பாரம்பரிய இனிப்புகள் அடங்கிய டிரெடிசனல் ட்ரீட், பலவித சுவை கலந்த புதுமையான இனிப்பு தொகுப்பு ஸ்பார்க்கிள் லைட், ஆரோக்கியமும் சுவையும் இணைந்த பருப்பு மற்றும் ட்ரை ப்ரூட் இனிப்புகள் நட்டி கிளாசிக் ஆகிய தொகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதனுடன், கிளாசிக்கல் காஜு பரிசுப் பெட்டிகள், பக்லாவா பரிசுப் பெட்டிகள் மற்றும் கிரிஸ்பி கரம்ஸ் என்ற கார வகைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து தொகுப்புகளும் அழகிய கலாம்காரி வடிவமைப்பில், பிரீமியம் பேக்கேஜிங் உடன், நிறுவன பரிசளிப்புகளுக்கும் குடும்ப பண்டிகைகளுக்கும் சிறப்பாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
அரோமா குழும நிர்வாக இயக்குனர் பொன்னுசாமி கூறுகையில், ''பிரமாண்டமான தீபாவளி தொகுப்பு, 2025ம் ஆண்டின் பண்டிகைக்கால பரிசாகும்,'' என்றார்.