/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இண்டோ ஸ்டேட்ஸ் ஹெல்த்' மருத்துவமைய செயலி அறிமுகம்
/
'இண்டோ ஸ்டேட்ஸ் ஹெல்த்' மருத்துவமைய செயலி அறிமுகம்
'இண்டோ ஸ்டேட்ஸ் ஹெல்த்' மருத்துவமைய செயலி அறிமுகம்
'இண்டோ ஸ்டேட்ஸ் ஹெல்த்' மருத்துவமைய செயலி அறிமுகம்
ADDED : ஆக 14, 2025 10:24 PM

சூலுார்; கோவை 'இண்டோ ஸ்டேட்ஸ் ஹெல்த்' மருத்துவ மையத்தின் துவக்க விழா மற்றும் புதிய செயலி அறிமுக விழா நேற்று நடந்தது.
கோவை, அரசூரில் 'இண்டோ ஸ்டேட்ஸ் ஹெல்த்' வருமுன் காப்போம் மருத்துவ மைய துவக்க விழா மற்றும் புதிய செயலி அறிமுக விழா நடந்தது. சமூக ஆர்வலர் இட்லி பாட்டி கமலாத்தாள், மருத்துவ மையத்தை துவக்கி வைத்தார்.
புதிய செயலியை அறிமுகப்படுத்தி, மருத்துவ மையத்தின் நிறுவனரும் முதன்மை செயல் அதிகாரியுமான டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி, நிறுவனர் டாக்டர் நித்யா மோகன் ஆகியோர் கூறியதாவது:
நமது சுதந்திர தினத்தை ஒட்டி, எங்கள் மருத்துவ மையத்தின் 'இண்டோ ஸ்டேட்ஸ் ஹெல்த்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு, வரும் முன் காப்பதன் வாயிலாக ஆரோக்கியமான எதிர்காலத்தை மக்களுக்கு உருவாக்கி கொடுப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட உள்ளோம். குறைந்த செலவில், நிம்மதியான வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்கும். அதிநவீன கருவிகளை கொண்டு முழுமையான ரத்தம் மற்றும் உடற்பரிசோதனைகள், நிபுணர்களால் செய்யப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.