sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோல்ட்வின்ஸ் பகுதியில் 'ஜெனோரா' நவீன சொகுசு வில்லாக்கள் அறிமுகம்

/

 கோல்ட்வின்ஸ் பகுதியில் 'ஜெனோரா' நவீன சொகுசு வில்லாக்கள் அறிமுகம்

 கோல்ட்வின்ஸ் பகுதியில் 'ஜெனோரா' நவீன சொகுசு வில்லாக்கள் அறிமுகம்

 கோல்ட்வின்ஸ் பகுதியில் 'ஜெனோரா' நவீன சொகுசு வில்லாக்கள் அறிமுகம்


ADDED : பிப் 02, 2026 06:54 AM

Google News

ADDED : பிப் 02, 2026 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'ஜென்விஸ்டாஸ் ரியால்டி' நிறுவனம் சார்பில், 'ஜெனோரா' அதிநவீன வில்லாக்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

ஜெனோரா வில்லா குடியிருப்பு, கோல்ட்வின்ஸ் பகுதியில் விமான நிலையத்தில் இருந்து 5 கி.மீ., ஜி.டி., நாயுடு மேம்பாலத்தில் இருந்து 3. கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. ஜெனோராவில் 5, 7 மற்றும் 11 சென்ட் பரப்பில், 3 மாடிகளைக் கொண்ட 59 வில்லாக்கள் கட்டப்படுகின்றன.

அதிக இடவசதி, எதிர்கால அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலான தனித்துவம் மிக்க கட்டமைப்பு, அமைதியான, ஓய்வு விடுதியைப் போன்ற வாழ்வனுபவம் தரும் வகையில் இல்லங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 40 சதவீதத்துக்கும் மேல் பசுமைப்பரப்பு, நிம்மதியான சூழலைத் தரும்.

ரூ.6 கோடி முதல் ரூ. 12 கோடி வரையிலான விலையில், பிரீமியம் வகை குடியிருப்பாக அமைகிறது. ஒவ்வொரு வில்லாவும், விசாலமான பால்கனி, நேர்த்தியான கட்டடக்கலை, அழகியலோடு, கவனமாக திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் அறிமுக விழாவில், 25 சதவீத வில்லாக்கள் ரூ.113 கோடி மதிப்புள்ள முன்பதிவுகளைப் பெற்றுள்ளன.

ஜென்விஸ்டாஸ் நிர்வாக இயக்குநர் சதீஷ்குமார் பேசுகையில், “எங்கள் முதல் திட்டமான ஜெனோராவுக்கு ஆதரவு அளித்த கோவை மக்களுக்கு நன்றி,” என்றார்.






      Dinamalar
      Follow us