ADDED : ஆக 10, 2026 04:11 AM
பொள்ளாச்சி: கரூர் தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் அன்ட் பேப்பர்ஸ் நிறுவனத்திலிருந்து, காகித உற்பத்தியில் இருந்து கிடைக்கும் சுண்ணாம்பு கழிவு பொருட்களை நேற்று முன்தினம், மூன்று லாரிகள் வாயிலாக, கோட்டயம், கொச்சின் சிமென்ட் நிறுவனத்திற்கு பொள்ளாச்சி, நடுப்புனி சோதனைச் சாவடிவழியாக எடுத்து சென்றபோது, பொதுமக்கள் சிலர், அவற்றில் கனிம வளம் ஏற்றிச்செல்வதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வி.ஏ.ஓ., செல்வராஜ், லாரிகளை, வடக்கிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று போலீசார் முன்னிலையில் ஆவணங்களை சரிபார்த்தார்.
பின், பொள்ளாச்சி சப் கலெக்டர் ராமகிருஷ்ணசாமியிடம், கேரளாவுக்கு எடுத்துச் செல்வது கனிம வளம் இல்லை என, தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் வாய்மொழி உத்தரவின் பேரில் லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும், விசாரணை செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
