ADDED : ஆக 10, 2026 04:11 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: சென்னை திருவனந்தபுரம் ரயிலில் பயணித்த, வட மாநில நபர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
சென்னை - திருவனந்தபுரம் ரயிலில், கடந்த, 4ம் தேதியன்று பயணம் செய்த வட மாநில நபர் பொள்ளாச்சி குஞ்சிபாளையம் அருகே, ரயில் சென்ற போது ரயிலில் இருந்து தவறி விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள், அந்த நபரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதுகுறித்து பொள்ளாச்சி ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., சாந்தி தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.
