ADDED : மே 07, 2025 11:58 PM
அன்னுார்; நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தில், மானிய விலையில், அடுக்கு மாடி வீடு பெற, பயனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அன்னுார் அருகே பொங்கலூரில் இருந்து, தாசராபாளையம் செல்லும் வழியில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
இதில் காந்தி நகரில் 528 வீடுகளும், அண்ணா நகரில் 360 வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. இதில் பயனாளிகள் 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பதாரரின் மாத வருமானம் 25,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும். சொந்தமாக வீடோ, மனையோ இருக்கக் கூடாது. திருமணமானவராக இருக்க வேண்டும்.
ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம் மற்றும் போட்டோவுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான சிறப்பு முகாம் அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த முகாமில் 55 பேர் வீடு கோரி விண்ணப்பம் அளித்தனர்.
மேலும் விவரங்களுக்கு 88072 48014 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
