/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கப் பத்திர திட்டத்தில் முதலீடு செய்ய அழைப்பு
/
தங்கப் பத்திர திட்டத்தில் முதலீடு செய்ய அழைப்பு
ADDED : பிப் 16, 2024 12:07 AM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அஞ்சல் துறை அலுவலர் நாகஜோதி, விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் பேரில், அஞ்சல் துறையில், தங்கப் பத்திரத் திட்டம், பொது மக்கள் பயன்பாட்டுக்கு உள்ளது.
2016ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம், 2,684 ரூபாயாக இருந்தது. 2023ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம், 6,199 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதனால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், இந்திய அஞ்சல் துறை தங்கப் பத்திர திட்டத்தை மக்களுக்கு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் ஒரு கிராம் முதல், 4 கிலோ வரை பணம் செலுத்தி, தங்கப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். பெறப்படும் தொகைக்கு, தங்கமாக வழங்காமல், பத்திரமாக கொடுக்கப்படும்.
இந்த தொகைக்கு ஆண்டுக்கு, 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். முதலீடு செய்யும் தொகை, 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சி அடையும்.
ஆனால் தேவை இருப்பின், ஐந்து ஆண்டில், அப்போது தங்கம் என்ன விலைக்குப் போகிறதோ, அதற்கான தொகை வழங்கப்படும்.
திட்டம், 12ம் தேதியிலிருந்து, 16ம் தேதி முடிய நடைமுறையில் அறிவிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இன்றுடன் முடிவடையும் தங்கப் பத்திர திட்டத்தில், முதலீடு செய்து, பயனடைய அழைப்பு விடுக்கப்படுகிறது.
இவ்வாறு அலுவலர் அறிக்கையில் கூறியுள்ளார்.