/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்; நேரில் முறையிட அழைப்பு
/
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்; நேரில் முறையிட அழைப்பு
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்; நேரில் முறையிட அழைப்பு
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்; நேரில் முறையிட அழைப்பு
ADDED : ஏப் 03, 2025 05:28 AM
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோவை மின்பகிர்மான வட்டம், மாநகர்/கோவை - நகரியக் கோட்டத்தில், வரும் 5ம் தேதி காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, சிறப்பு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
நகரியக் கோட்ட செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் முன்னிலையில் நடக்கும் கூட்டத்துக்கு, செயற்பொறியாளர்/நகரியம்/மாநகர்/ கோவை அலுவலகத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர், முகாமில், மின்வாரியம் சம்பந்தமான, தங்களது பகுதியில் உள்ள பழுதடைந்த மின்மானிகள், பழுதடைந்த மின்கம்பங்கள், மின்னழுத்த குறைபாடுகள் மற்றும் மின் கட்டண குறைபாடுகள் சம்பந்தமான அனைத்து குறைகளையும் நேரில் முறையிட்டு, பயன்பெறலாம் என அழைப்பு விடப்பட்டுள்ளது.