/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு
/
மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு
ADDED : மே 01, 2025 04:14 AM
அன்னுார் : அன்னுாரில் மனவளக்கலை பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது.
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த, 'முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா' என்னும் 12 நாள் பயிற்சி வகுப்பு அன்னுாரில் இன்று துவங்குகிறது.
அன்னுார் அ.மு.காலனியில் உள்ள மனவளக்கலை மன்றத்தில், இன்று (மே 1ம் தேதி) மாலை 4:00 மணிக்கு இலவச அறிமுக வகுப்பு நடைபெறுகிறது.
இதில், உடல் நலம் ஆரோக்கியத்துடன் வாழ, எளிய முறை உடற்பயிற்சி, மனவளம் பெற்று மன அமைதியுடன் வாழ தவ பயிற்சி, நீண்ட நாட்கள் இளமையுடன் வாழ காயகல்ப பயிற்சி கற்றுத் தரப்படும்.
தொடர்ந்து 12 நாட்கள் மாலை 4:00 மணி முதல், 6:00 மணி வரை, பயிற்சி வகுப்பு நடைபெறும். 'மேலும் விவரங்களுக்கு 97899 88949 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

