/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண் பரிசோதனை முகாம் பங்கேற்க அழைப்பு
/
கண் பரிசோதனை முகாம் பங்கேற்க அழைப்பு
ADDED : அக் 29, 2025 11:47 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, முள்ளுப்பாடியில் இன்று (30ம் தேதி) இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.
கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தில், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், இன்று 30ம் தேதி, இலவச கண் பரிசோதனை முகாம் காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது.
முகாமில், கண் புரை, கண்நீர் அழுத்த நோய் மற்றும் சர்க்கரை நோயினால் கண் விழித்திரை பாதிப்பு மற்றும் இதர கண் சார்ந்த பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், கண் சார்ந்த பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். கண் பிரச்னை உள்ள நபர்கள் முகாமிற்கு வரும்போது, மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

