/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் வேலை வாய்ப்பு முகாம் 24ம் தேதி பங்கேற்க அழைப்பு
/
தனியார் வேலை வாய்ப்பு முகாம் 24ம் தேதி பங்கேற்க அழைப்பு
தனியார் வேலை வாய்ப்பு முகாம் 24ம் தேதி பங்கேற்க அழைப்பு
தனியார் வேலை வாய்ப்பு முகாம் 24ம் தேதி பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 21, 2025 10:24 PM
பொள்ளாச்சி; கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான, சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், ஒவ்வொரு மாதமும், மூன்றாவது வெள்ளியன்று நடத்தப்படுகிறது.
இம்மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் 24ம் தேதி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், காலை 10:00 மணி முதல் நடக்கிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மனுதாரர்கள், தங்கள் சுயவிபரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்கலாம்.
பங்கேற்க, வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தேர்வு செய்யப்படுவோருக்கு, அப்போதே பணி நியமன ஆணை வழங்கப்படும்.
நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு, ரத்து செய்யப்பட மாட்டாது.
பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய, இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
விபரங்களுக்கு, 0422 2642388 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என, மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.