/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐம்பெரும் விழாவில் பங்கேற்க அழைப்பு
/
ஐம்பெரும் விழாவில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 14, 2025 09:37 PM
கோவில்பாளையம்:
கவையன் புத்தூர் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்னூர் அருகே நல்ல கவுண்டம்பாளையம், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில், கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம் சார்பில், பொங்கல் விழா, இளைஞர் தின விழா, திருவள்ளுவர் நாள் விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்து பேசுகிறார். ஆசிரம குருஜி சிவாத்மா அருளுரை வழங்குகிறார். ராமகிருஷ்ண வித்யாலயா பணி நிறைவு பேராசிரியர் வேலுச்சாமி, 'சுதந்திரமும், பயன்களும்' குறித்து பேசுகிறார்.
பணி நிறைவு தலைமை ஆசிரியர் சாந்தி சொக்கலிங்கம், 'அடுக்கி வரினும், அழிவிலான்' என்னும் தலைப்பில் பேசுகிறார்.
புதுகை வெற்றி வேலனின் நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. பேராசிரியர்கள் வாழ்த்தி பேசுகின்றனர். விழாவில் பங்கேற்று தமிழமுதம் பருக அழைப்பு விடுத்துள்ளனர்.