ADDED : ஜூலை 08, 2025 12:12 AM
அன்னுார்; அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பொன் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்னுார் அமரர் முத்துக் கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1,100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் 1974---75ம் ஆண்டு எஸ். எஸ்.எல்.சி., படித்த மாணவ, மாணவியர், தங்களது 50வது ஆண்டு பொன்விழாவை வருகிற 20ம் தேதி ஞாயிறன்று தங்கள் குடும்பத்துடன் பள்ளி வளாகத்தில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
இவ்விழாவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு உதவுதல், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
'இப் பள்ளியில் 1974--75ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த மாணவ மாணவியர், பொன் விழாவில் பங்கேற்க, பள்ளிக்கு உதவ, 94426 27009 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.