/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலக்கிய விழாவில் பங்கேற்க அழைப்பு
/
இலக்கிய விழாவில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஆக 20, 2025 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்; கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம் மற்றும் பி.பி.ஜி., கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த் துறை சார்பில், இலக்கிய விழா இன்று கல்லூரி வளாகத்தில், காலை 10 : 00 மணிக்கு நடைபெறுகிறது. கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை வகிக்கிறார்.
பயனீர் கல்லூரி முதல்வர் முருகேசன், 'அகலாது அணுகாது தீக்காய்வார்,' என்னும் தலைப்பில் பேசுகிறார். ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், வ.உ.சி., ராணி லட்சுமிபாய், சரோஜினி நாயுடு, ஆகியோர் குறித்தும், 'படித்ததில் பிடித்தது, அறிவோம் ஒரு அரிய செய்தி' ஆகிய தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசுகின்றனர்.
'விழாவில் பங்கேற்று, தமிழமுதம் பருகலாம்,' என சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.