/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வினாடி - வினாவில் பங்கேற்க அழைப்பு
/
வினாடி - வினாவில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 13, 2024 01:58 AM
கோவை;தமிழகத்தில், வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில், மாநில அளவில் பொது மக்களுக்கு வினாடி வினா போட்டி, வரும், 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை, 11:00 முதல், 11:15 மணி வரை நடக்கிறது.
பங்கேற்க விரும்புவோர், https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணைய தள முகவரியில், தங்களது பெயர் மற்றும் இதர விபரங்களை பதிவு செய்ய வேண்டும். வரும் 18, 19ம் தேதி மட்டும் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.
'இந்தியாவில் தேர்தல்கள்' என்ற தலைப்பில் இப்போட்டி நடத்தப்படும். விபரங்களுக்கு, மாவட்ட உதவி எண்: 1950, மாநில உதவி எண்: 1800 4252 1950 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.