ADDED : ஜன 24, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுாரில் அ.மு.காலனியில் மனவளக்கலை மன்றம் உள்ளது. இதன் சார்பில், சொக்கம்பாளையத்தில் தவ மையம் செயல்படுகிறது. வருகிற 28ம் தேதி சொக்கம்பாளையம், தவ மையத்தில், மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த காயகல்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
பேராசிரியர் பாஸ்கர் பயிற்சி அளிக்கிறார். காயகல்ப பயிற்சி பெறுவதால், உடலில் உள்ள நரம்பு மண்டலங்கள் வலுப்பெறும். உடல்நலம், மனநலம் மேம்படும்.'மேலும் விபரங்களுக்கு 97899 88949 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

