/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானியத்தில் காய்கறி விதை பழ நாற்று தொகுப்பு பெற அழைப்பு
/
மானியத்தில் காய்கறி விதை பழ நாற்று தொகுப்பு பெற அழைப்பு
மானியத்தில் காய்கறி விதை பழ நாற்று தொகுப்பு பெற அழைப்பு
மானியத்தில் காய்கறி விதை பழ நாற்று தொகுப்பு பெற அழைப்பு
ADDED : ஜூன் 26, 2025 09:40 PM
கிணத்துக்கடவு; மானியத்தில் காய்கறி விதை மற்றும் பழ தொகுப்பு பெற விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்துள்ளது.
மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் வாயிலாக, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை சார்பில், தக்காளி, கத்திரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், கொத்துஅவரை மற்றும் கீரை போன்ற ஆறு வகையான காய்கறி விதை தொகுப்பு, 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. 3,850 விதை தொகுப்புகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கொய்யா, எலுமிச்சை மற்றும் பப்பாளி ஆகிய மூன்று நாற்றுகள் கொண்ட தொகுப்பு, 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இது, 2,500 தொகுப்புகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விதை மற்றும் பழ நாற்றுகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெறலாம். இதற்கு, ஆதார் அல்லது ரேஷன் கார்டு நகலை, தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து பெறலாம்.
ஒரு நபருக்கு, இரண்டு விதை தொகுப்பு அல்லது இரண்டு பழ தொகுப்பு (இரண்டில் ஒன்று) வழங்கப்படும். இது குறித்து கூடுதல் விபரங்கள் பெற தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
இத்தகவலை, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.