/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெல் சாகுபடிக்கு மானியம் பெற்றுக்கொள்ள அழைப்பு
/
நெல் சாகுபடிக்கு மானியம் பெற்றுக்கொள்ள அழைப்பு
ADDED : ஆக 17, 2025 11:13 PM
கோவை ; கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி அறிக்கை:
கோவை மாவட்டத்தில், ஆண்டுக்கு சுமார் 952 எக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனைமலை மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரங்களில், அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
நெல் சாகுபடியை ஊக்குவிக்க, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் ரூ.2.06 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மானியம் வழங்கப்படுகிறது.
பத்து ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட, புதிய நெல் ரகங்களை சாகுபடி செய்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.8 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
வீரிய நெல் விதைகள் வாங்கும் விவசாயிகளுக்கு, கிலோவுக்கு ரூ.20 மானியம் வழங்கப்படுகிறது. ஆனைமலை மற்றும் தொண்டாமுத்தூர் வட்டார விவசாயிகள், வேளாண் உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு, மானிய விலையில் விதைகள் பெற்று, உயர் மகசூல் பெறலாம்.

