/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.காம்., படிப்பில் சேர மாணவருக்கு அழைப்பு
/
எம்.காம்., படிப்பில் சேர மாணவருக்கு அழைப்பு
ADDED : ஆக 04, 2025 08:23 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், எம்.காம்., முதுநிலை பாடப்பிரிவு உள்ளது. இதில், 40 மாணவர்கள் சேர இடம் உள்ளன.
இளம் கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவியர், 2025-26ம் கல்வி ஆண்டில் முதுநிலை பாடப்பிரிவில் சேர்வதற்கு, தமிழக அரசு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவித்திருந்தது.
முதுநிலை பாடப்பிரிவில் சேர்வதற்கு, சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு, வருகிற, 11, 12 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற உள்ளது.
பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, 13ம் தேதியில் முதல் தொடர்ந்து நடைபெற உள்ளது.
எனவே இந்த அரிய வாய்ப்பினை மாணவ, மாணவியர் பயன்படுத்தி, எம்.காம்., பாடப்பிரிவில் சேர்ந்து பயன் பெறலாம் என, கல்லூரி முதல்வர் அறிக்கையில்கூறியுள்ளார்.