ADDED : ஜன 28, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
அன்னூர்: மாவட்ட அளவிலான குண்டெறிதல் மற்றும் வட்டெறிதல் போட்டி வரும், 31ம் தேதி நடைபெறுகிறது.
அன்னூர் அத்லெடிக் கிளப் சார்பில், மேட்டுப்பாளையம், ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாவட்ட அளவிலான குண்டெறிதல் மற்றும் வட்டெறிதல் போட்டிகள் வரும் 31ம் தேதி நடைபெறுகிறது. 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர், 18 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு மேற்பட்டோர் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது.
நேரடியாக போட்டியில் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் ஆதார் நகலை எடுத்து வர வேண்டும். 'கூடுதல் விவரங்களுக்கு 86676 79039 என்னும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்' என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
