/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
400 நாட்கள் டெபாசிட் வாய்ப்பை பயன்படுத்த வந்தது அழைப்பு
/
400 நாட்கள் டெபாசிட் வாய்ப்பை பயன்படுத்த வந்தது அழைப்பு
400 நாட்கள் டெபாசிட் வாய்ப்பை பயன்படுத்த வந்தது அழைப்பு
400 நாட்கள் டெபாசிட் வாய்ப்பை பயன்படுத்த வந்தது அழைப்பு
ADDED : ஆக 04, 2025 11:23 PM
கோவை; கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், நிரந்தர வைப்பு டெபாசிட்டுக்கு அதிகபட்சமாக 8.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், வைப்புகள் மற்றும் கடன்கள் மீதான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சமாக, 400 நாட்கள் டிபாசிட்டுக்காக, அதிகபட்சமாக, 8.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
இதன் ஒரு கட்டமாக, 1919ம் ஆண்டு துவங்கி, 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த கே 4303 மதுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு, அழைப்பு விடுத்துள்ளது.
பொதுமக்கள் பயன்பெற ஆங்காங்கே, இதுகுறித்த அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளது. குறைந்த வட்டியில் நபருக்கு அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை உடனடி நகைக்கடன், கால்நடை பராமரிப்பு கடன், குறைந்த வட்டியில் மத்திய கால கடன், கறவை மடு வாங்க, ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் கடன்களை, பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.