/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.பி.ஏ.ஏ. கூடைப்பந்து போட்டி; வெற்றி வாகை சூடியது பி.எஸ்.ஜி.
/
ஐ.பி.ஏ.ஏ. கூடைப்பந்து போட்டி; வெற்றி வாகை சூடியது பி.எஸ்.ஜி.
ஐ.பி.ஏ.ஏ. கூடைப்பந்து போட்டி; வெற்றி வாகை சூடியது பி.எஸ்.ஜி.
ஐ.பி.ஏ.ஏ. கூடைப்பந்து போட்டி; வெற்றி வாகை சூடியது பி.எஸ்.ஜி.
ADDED : செப் 15, 2025 09:52 PM

கோவை; 'இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன்' (ஐ.பி.ஏ.ஏ.,) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணியும், பி.எஸ்.ஜி., அணியும் மோதின. 32-21 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி., அணி வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாம் அரையிறுதியில், ஜி.பி.டி.,அணி, 41-40 என்ற புள்ளிகளில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணியை வென்றது.
இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி, 43-21 என்ற புள்ளிகளில் ஜி.பி.டி., அணியை வென்று முதலிடம் பிடித்தது.
நாச்சிமுத்து பாலிடெக்னிக் அணி, 48-21 என்ற புள்ளிகளில் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் முதல்வர் கிரிராஜ் பரிசு வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.