தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஐ.பி.ஏ.ஏ. மாநில கிரிக்கெட் எஸ்.பி.டி.சி.க்கு கோப்பை

 ஐ.பி.ஏ.ஏ. மாநில கிரிக்கெட் எஸ்.பி.டி.சி.க்கு கோப்பை

 ஐ.பி.ஏ.ஏ. மாநில கிரிக்கெட் எஸ்.பி.டி.சி.க்கு கோப்பை


ADDED : பிப் 11, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான ஐ.பி.ஏ.ஏ., மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில் 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பங்கேற்றன.

பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், திருநெல்வேலி எஸ்.பி.டி.சி., அணியும், திருச்சி கே.என்.பி.சி., அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த எஸ்.பி.டி.சி., அணியினர் 20 ஓவரில் நான்கு விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய கே.என்.பி.சி., அணியினர் 15 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 66 ரன் எடுத்தனர். திருநெல்வேலி அணி சாம்பியன்ஷிப் வென்றது.

மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில் வேலுார் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லுாரி அணியும், ஈரோடு கே.எஸ்.ஆர்.ஐ.டி., அணியும் விளையாடின. பேட்டிங் செய்த ராஜகோபால் அணியினர் 10 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 65 ரன் எடுத்தனர். கே.எஸ்.ஆர்.ஐ.டி., அணியினர் எட்டு ஓவரில் இரண்டு விக்கெட்டுக்கு 66 ரன் எடுத்து மூன்றாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறை தலைவர் சண்முகசுந்தரம் பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் முரளிகிருஷ்ணன் பங்கேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us