/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.பி.ஏ.ஏ., மாநில கபடி போட்டி; நாகை-புதுச்சேரி அணி சாம்பியன்
/
ஐ.பி.ஏ.ஏ., மாநில கபடி போட்டி; நாகை-புதுச்சேரி அணி சாம்பியன்
ஐ.பி.ஏ.ஏ., மாநில கபடி போட்டி; நாகை-புதுச்சேரி அணி சாம்பியன்
ஐ.பி.ஏ.ஏ., மாநில கபடி போட்டி; நாகை-புதுச்சேரி அணி சாம்பியன்
ADDED : பிப் 06, 2025 09:49 PM
கோவை; ஐ.பி.ஏ.ஏ., மாநில அளவிலான கபடி போட்டியில் அரிபா பாலிடெக்னிக் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
'இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன்'(ஐ.பி.ஏ.ஏ.,) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான கபடி போட்டி, இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தது. பெண்களுக்கான இப்போட்டியில், 10 டிவிஷன் அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதி போட்டியில், அரிபா பாலிடெக்னிக் கல்லுாரி அணி (நாகை மற்றும் புதுச்சேரி டிவிஷன்), 41-32 என்ற புள்ளி கணக்கில் வெங்கடேஷ்வரா பாலிடெக்னிக் கல்லுாரி அணியை(ஈரோடு டிவிஷன்) வென்றது.
இரண்டாம் அரையிறுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணி(மதுரை டிவிஷன்), 28-27 என்ற புள்ளி கணக்கில் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லுாரி அணியை(திருச்சி டிவிஷன்) வென்றது. இறுதிப்போட்டியில், அரிபா பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 38-16 என்ற புள்ளி கணக்கில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணியை வீழ்த்தியது.
மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், வெங்கடேஷ்வரா பாலிடெக்னிக் கல்லுாரி அணியும், கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் மோதின. இதில், 38-21 என்ற புள்ளி கணக்கில் வெங்கடேஷ்வரா கல்லுாரி அணி வெற்றி பெற்று மூன்றாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் பரிசுகள் வழங்கினார். முதல்வர் கோகிலவாணி, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.