/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.பி.ஏ.ஏ., டேபிள் டென்னிஸ் போட்டி; பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் முதலிடம்

ADDED : பிப் 05, 2025 12:49 AM
கோவை; ஐ.பி.ஏ.ஏ., மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
'இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன்'(ஐ.பி.ஏ.ஏ.,) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. 11 டிவிஷன் அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி(கோவை டிவிஷன்) அணி, 3-0 என்ற செட் கணக்கில், புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லுாரி அணியை(வேலுார் டிவிஷன்) வென்று, முதலிடம் பிடித்தது.
மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், தியாகராஜா பாலிடெக்னிக் கல்லுாரியும்(சேலம் டிவிஷன்), நந்தா பாலிடெக்னிக் கல்லுாரியும் (ஈரோடு டிவிஷன்) மோதின.
இதில், 3-0 என்ற செட் கணக்கில் தியாகராஜா கல்லுாரி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லுாரி மெக்கானிக்கல் இன்ஜி., துறை பேராசிரியர்கள் நாகராஜ், சரவணக்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.