/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி வளர்ச்சி பணிகளில் முறைகேடு; 20ல் ஆர்ப்பாட்டம்
/
நகராட்சி வளர்ச்சி பணிகளில் முறைகேடு; 20ல் ஆர்ப்பாட்டம்
நகராட்சி வளர்ச்சி பணிகளில் முறைகேடு; 20ல் ஆர்ப்பாட்டம்
நகராட்சி வளர்ச்சி பணிகளில் முறைகேடு; 20ல் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 14, 2025 08:03 PM
வால்பாறை; வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு வார்டை தவிர மீதமுள்ள வார்டுகளில் தி.மு.க., வை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த ஒருவர் மட்டும் கவுன்சிலராக உள்ளார்.
தி.மு.க.,வை சேர்ந்தவர் தலைவராக உள்ளார். இந்நிலையில், வால்பாறை நகராட்சியில் வளர்ச்சிப்பணி என்ற பெயரில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறி ஒட்டு மொத்த கவுன்சிலர்கள் தலைவருக்கு எதிராக குரல் எழுப்பி வருவதோடு, தொடர்ந்து மூன்று முறை மன்றக்கூட்டமும் நடத்தவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின்கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி, வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வால்பாறை நகராட்சியில், தெருவிளக்கு, ரோடு, படகு இல்லம், துாய்மை பணிகள், உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன் வரும், 20ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்று தெரிவித்துள்ளார்.