/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சதமடித்த சோலையாறு அணை மகிழ்ச்சியில் பாசன விவசாயிகள்
/
சதமடித்த சோலையாறு அணை மகிழ்ச்சியில் பாசன விவசாயிகள்
சதமடித்த சோலையாறு அணை மகிழ்ச்சியில் பாசன விவசாயிகள்
சதமடித்த சோலையாறு அணை மகிழ்ச்சியில் பாசன விவசாயிகள்
ADDED : ஜூன் 01, 2025 11:31 PM

வால்பாறை : தென்மேற்குப்பருவ மழையினால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 100 அடியாக உயர்ந்தது.
வால்பாறையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, தென்மேற்குப்பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவமழையால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 100.35 அடியாக உயர்ந்தது. இந்த ஆண்டில் முதல் முறையாக சோலையாறு அணையின் நீர்மட்டம், சதமடித்ததால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அணைக்கு வினாடிக்கு, 2009 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. இதே போல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 34.35 அடியாகவும், 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 82.85 அடியாகவும் உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் மழைப்பொழிவு குறைந்த நிலையில் அதிகபட்சமாக மேல்நீராறில், 8 மி.மீ., மழை பெய்துள்ளது.