/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் ஈரம் பொறுத்து நீர் ப் பாசனம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
/
மண் ஈரம் பொறுத்து நீர் ப் பாசனம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
மண் ஈரம் பொறுத்து நீர் ப் பாசனம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
மண் ஈரம் பொறுத்து நீர் ப் பாசனம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஜன 31, 2024 10:36 PM
பொள்ளாச்சி-கோவை மாவட்டத்தில், வரும் நாட்களில், வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது.
மண் ஈரத்தினை பொறுத்து இறவை பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்து, பயிர் கழிவு மூடாக்கு செய்ய விவசாயிகளுக்கு, வேளாண் பல்கலை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் ஐந்து நாட்கள், 30-32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை19-20 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 40 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.
விவசாய நிலங்களில் அறுவடை முடிந்த பின், கோடைகால மழையின் ஈரப்பதத்தை சேகரிக்க முன்னேற்பாடு மேற்கொள்ள வேண்டும்.
நிலவும் வானிலையில், நெற்பயிரில் கதிர் நாவாய் பூச்சியின் தாக்குதல் தென்பட்டால் ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி டைக்குளோவாஸ் கலந்து தெளிக்கவும்.
நீர்ப்பாசனம் உள்ள இடங்களில் மட்டும் இறவை மக்காச்சோள விதைப்பினை மேற்கொள்ளலாம். தற்போதைய காலநிலையை கருத்தில் கொண்டு, முன்பருவ கரும்பு சாகுபடியை உடனடியாக மேற்கொள்வதன் வாயிலாக, அதிக மகசூல் பெறமுடியும். மஞ்சள் கிழங்கு முதிர்வடையும் நிலையில் இருப்பதால், அளவான தண்ணீர் பாய்ச்ச அறிவுறுத்தப்பட்டுள்ளது.